Master Producer Gift to Sushana
Master Producer Gift to Sushana

விக்ரம் பாட்டுக்கு பார்வையற்ற பாடகியான சிறுமி சுஹானா மெட்டு போட்டுள்ளார்.

Master Producer Gift to Sushana : தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சரிகமப என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் சுஹானா.

பிறவியிலேயே பார்வையற்ற சுசானா நன்றாக பாடுவது மட்டுமல்லாமல் கீபோர்ட் இசைப்பதிலும் சிறந்து விளங்குபவர்.

தற்போது இவர் இரு தினங்களுக்கு முன்னர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் இருந்து வெளியான தும்பி துள்ளல் என்ற பாடலுக்கு கீ போர்டில் மெட்டு போட்டு இருந்தார்.

ரஜினிக்கு நன்றி கூறி அஜித் விஜய்க்கு கோரிக்கை வைத்த ராகவா லாரன்ஸ் – ஏற்பார்களா தல தளபதி??

அந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டு இருந்தார். இதற்கு கோப்ரா படத்திற்கு இசை அமைத்துள்ள ஏ ஆர் ரகுமான் வாழ்த்துக் கூறி இருந்தார்.

இதனையடுத்து மாஸ்டர் மற்றும் கோப்ரா படத்தைத் தயாரித்து வரும் தயாரிப்பாளர் லலித் குமார் இசைக்கருவி ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்து சுஹானாவின் பக்கத்தில் பதிவாகியுள்ள பதிவில் லலித் குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தன்னை ஊக்கப்படுத்திய ஏ ஆர் ரகுமானுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த பாடல் மட்டும் அல்லாமல் சுச் ஆனா இன்னும் பல பாடல்களுக்கு இதேபோல் மெட்டுப் போட்டு உள்ளார். அவைகளில் சில