Master Producer Emotional Speech
Master Producer Emotional Speech

தளபதி விஜய் மாஸ்டர் படத்திற்காக ஒரு பைசா கொடுக்கல என வருத்தப்பட்டு பேசியுள்ளார் தயாரிப்பாளர் பிரிட்டோ.

Master Producer Emotional Speech : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், மகேந்திரன், ரம்யா, வர்ஷா பொல்லம்மா, தீனா மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரேட்டர்ஸ் நிறுவனம் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

எக்ஸ்பி பிலிம் கிரேட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான பிரிட்டோ தளபதி விஜயின் மாமா உறவுமுறை கொண்டவர். இதனால் இந்த படத்தின் தயாரிப்பிற்கு விஜய் தான் பணம் கொடுத்துள்ளார். பிரிட்டோ பினாமியாக இருக்கிறார் என பல பேச்சுகள் எழுந்தன.

பல வருடங்களுக்குப் பிறகு OTT-யில் வெளியாகும் தளபதியின் திரைப்படம் – விஜய் ரசிகர்களுக்கு வெளியான சர்ப்ரைஸ் அப்டேட்

இது முழுக்க முழுக்க விஜய்யின் தயாரிப்பில் உருவாகும் படம் தான் எனவும் கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் பிரிட்டோ அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்த படத்திற்காக விஜய் ஒரு பைசா கூட கொடுக்கல. நான் அவரோட பினாமினு சொல்றத நிறுத்துங்க, அப்படி சொல்வதை கேட்கும் போது எனக்கு கஷ்டமாக உள்ளது என வருத்தப்பட்டு பேசியுள்ளார்.