Master Producer About Movie Profits

மாஸ்டர் திரைப்படம் லாபமா? நஷ்டமா? என்பது குறித்து தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Master Producer About Movie Profits : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ மற்றும் லலித் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.

இந்த படம் கடந்த ஜனவரி 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் படம் 300 கோடி வசூல் செய்தது இன்னொரு கோடி வசூல் செய்தது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோ அவர்கள் அளித்த பேட்டியில் படத்தின் வசூல் 200 கோடி, 300 கோடி என்பதெல்லாம் படத்தின் கிராஸ் கலெக்ஷன் தான். அதாவது படம் விற்பனையான தொகை தான். அதற்கு மேல் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது தான் படத்தின் லாபம் என பேசியுள்ளார்.

ஒரு படத்தின் லாபம் எவ்வளவு என்பது அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு மட்டும்தான் தெரியும் என கூறியுள்ளார்.