Master Overseas Release Issue

வெளிநாடுகளில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆவதில் மீண்டும் சிக்கல் உருவாகியுள்ளது.

Master Overseas Release Issue : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், மகேந்திரன், வர்ஷா பொல்லம்மா, தீனா, பிரேம் என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த வருடம் ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் கொரானா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு திரையரங்குகள் முற்பட்டதன் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போய் வந்தது.

இப்படியான நிலையில் வரும் 2021 ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் விருந்தாக இத்திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

ஆனால் கொரானா வைரஸ் தொற்று ஐரோப்பிய நாடுகளில் உருமாற்றம் பெற்று மீண்டும் அதிதீவிரமாக பரவத் தொடங்கியுள்ளதால் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் லாக் டவுன் அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இந்த நாடுகளில் மாஸ்டர் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக விஜய் ரசிகர்களும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் சோகம் அடைந்துள்ளனர். படக்குழு திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நாடுகளில் மாஸ்டர் படத்தை வேறு வழியில் ரிலீஸ் செய்ய வேறு ஏதாவது திட்டம் உள்ளதா என யோசித்து வருகிறார்களா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

படக்குழு என்ன முடிவை எடுக்கிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.