Master OTT Rights Announcement

மாஸ்டர் படத்தின் உரிமையை நெட்பிளிக்ஸ் OTT தளம் கைப்பற்றி இருப்பதாக தயாரிப்பாளர் லலித் குமார் அறிவித்துள்ளார்.

Master OTT Rights Announcement : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜயுடன் விஜய்சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படம் ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக இருந்த நிலையில் கொரானா வைரஸ் தொற்று பரவ தொடங்கியதால் திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.

இதனையடுத்து படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. அதேசமயம் இந்த படத்தை OTT-யில் வெளியிடப் போவதாகவும் பலமுறை தகவல்கள் வெளியாகின. ஆனால் அதையெல்லாம் படக்குழு தொடர்ந்து மறுத்து வந்தது.

இப்படியான நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்துள்ளர்.

ஆனால் மாஸ்டர் திரைப்படம் நேரடியாக நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகுமா அல்லது திரையரங்குகளில் ரிலீஸ் ஆனபிறகு வெளியாகுமா என்பது குறித்து அவர் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை உருவாக்கி பரவ தொடங்கி மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் நிச்சயம் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் தான் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் எனவும் கூறப்பட்டு வருகிறது.

அதே சமயம் தியேட்டர்கள் திறக்கப்பட்டால் நிச்சயம் திரையரங்குகளில் வெளியான பின்னரே OTT-ல் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தை தியேட்டரில் கண்டுகளிக்க முடியுமா முடியாதா என குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.