Master OTT Release Details

மாஸ்டர் திரைப்படத்தின் OTT ரிலீஸ் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Master OTT Release Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஒரு வாரம் ஆகியும் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் OTT ரிலீஸ் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு எப்போது என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

அதாவது வரும் பிப்ரவரி 12ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் இப்படம் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

மேலும் சன் டிவியில் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் ஒளிபரப்பப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.