Master Teaser Celebration

மாஸ்டர் டீசருக்காக திரையரங்குகளில் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Master Movie Teaser Celebration : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக வெளியானது.

இதனை திரையரங்குகளில் வெளியிட்ட போது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.