Master Review

விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க

Master Movie Review : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் விஜய்சேதுபதி அர்ஜுன் தாஸ் மாளவிகா மோகனன் ஆண்ட்ரியா சாந்தனு சஞ்சீவ் ஸ்ரீநாத் பலர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.

படத்தின் கதைக்களம் :

நடிகர் விஜய் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார். இவர் போதைக்கு அடிமையானவராக இருப்பதால் கல்லூரியில் ஏற்பட்ட ஒரு பிரச்சனை காரணமாக வெளியேற்றப்படுகிறார்.

அதன் பின்னர் சிறுவர் சீர்திருத்த பள்ளி ஒன்றில் வாத்தியாராக நியமிக்கப்படுகிறார். இந்த பள்ளி விஜய் சேதுபதியின் கட்டுப்பாட்டை உள்ளதால் அவர் மாணவர்களை சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுத்துகிறார்.

இந்த விஷயம் விஜய்க்கு தெரியவர இருவருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. அத்துமீறி அநியாயங்களை செய்யும் விஜய் சேதுபதியை தளபதி விஜய் எப்படி அடக்கி ஆள்கிறார் என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

தளபதி விஜய் வழக்கம் போல இந்த படத்திலும் தன்னுடைய மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை மிரள வைத்துள்ளார். விஜயிடம் இதுவரை இல்லாத புதிய ஸ்டைலை இந்த படத்தில் பார்க்கலாம்.

விஜய் சேதுபதி மிக மோசமான வில்லனாக படத்தில் தெரிவித்துள்ளார். விஜய்க்கு இணையான காட்சிகள் இவருக்கும் இடம்பெற்றுள்ளன.

விஜய் சேதுபதிக்கு ஆதரவாக அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். அவரும் தன்னுடைய நடிப்பில் மிரட்டி எடுத்துள்ளார். மாஸ்டர் திரைப்படத்தில் விஜய், விஜய் சேதுபதிக்கு அடுத்ததாக மிகவும் கவனிக்கப்படும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

மாளவிகா மோகனன் அழகான நடிப்பால் நம்மை அசர வைக்கிறார்.

சாந்தனு, மஹேந்திரன், கௌரி கிஷன், ரம்யா உள்ளிட்டோர் சிறிது நேரம் வந்தாலும் நம்மை பிரமிக்க வைத்து செல்கின்றனர்.

தொழில்நுட்பம் :

இசை :

அனிருத் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது விஷுவலாக பார்க்கும்போது பாடல்கள் என்னை ரசிக்கும் வகையில் அமைந்துள்ளன.

ஒளிப்பதிவு :

சத்யன் சூரியன் காட்சிகள் ஒவ்வொன்றையும் அழகாக படமாக்கியுள்ளார்.

இயக்கம் :

லோகேஷ் கனகராஜ் விஜய், விஜய் சேதுபதி என இரண்டு பேரும் நடிகர்களை ஒரே படத்தில் வைத்து கச்சிதமாக கையாண்டுள்ளார்.

இருவருக்கும் இணையான கதாபாத்திரங்களை கொடுத்து கதையை கொண்டு சென்று இருப்பது மிக மிக பிரமாதம்.

எமோஷனல் இன்டர்வல் பிளாக், செம மாஸான கிளைமாக்ஸ் என மிரட்டலான காட்சிகளால் மீண்டும் தன்னை தரமான இயக்குனர் என நிரூபித்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

  1. விஜய், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் நடிப்பு
  2. லோகேஷ் கனகராஜ் இயக்கம்
  3. அனிருத் இசை
  4. கிளைமேக்ஸ்
  5. இன்டர்வல் பிளாக்

தம்ப்ஸ் டவுன் :

  1. படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

REVIEW OVERVIEW
மாஸ்டர் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
master-movie-reviewமொத்தத்தில் மாஸ்டர் மரண மாஸ் பொங்கல் ட்ரீட்.