Master Movie Collection in America

அமெரிக்காவில் மாஸ்டர் திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்ததாக அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Master Movie Collection in America : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

Thalapathy Vijay Master Movie Stills HD

இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படம் உலகம் முழுவதும் பொங்கல் விருந்தாக ஜனவரி 13-ஆம் தேதி வெளியானது. பெரும்பாலான இடங்களில் படம் வசூல் வேட்டையாடி வருகிறது.

அதே சமயம் சில இடங்களில் எதிர்பாராத அளவில் தோல்வியை தழுவியதாகவும் கூறப்பட்டு வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி அமெரிக்காவிலும் மாஸ்டர் திரைப்படம் தோல்வியை தழுவியதாக கூறப்படுகிறது.

கடந்த 10 நாளில் சுமார் ரூபாய் 2.8 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இங்கு மாஸ்டர் திரைப்படம் தோல்வியை தழுவியதாக கூறப்படுகிறது.

உலக அளவில் இப்படம் ரூபாய் 200 கோடி வரை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.