மாஸ்டர் படத்தின் வசூல் என்ன என்பதை தயாரிப்பாளருக்கு தான் தெரியும், ஆனாலும் ஒன்று என பிரபல விநியோகஸ்தர் இந்த படம் பற்றி பேசியுள்ளார்.

Master Movie Collection Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தை லலித்குமார் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார். படம் உலகம் முழுவதும் நல்ல வசூலைப் பெற்றிருந்தது. கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தர் ஒருவர் அளித்த பேட்டியில் மாஸ்டர் படத்தின் வசூல் என்ன என்பது தயாரிப்பாளருக்கு தான் தெரியும். ஆனால் ஒன்று பாகுபலி படத்தின் வசூல் சாதனையை மாஸ்டர் முறியடித்து விட்டது என்பது மட்டும் உண்மை என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.