Master Mahendran in D43

தனுஷின் D43 படத்தில் மகேந்திரன் இணைய உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Master Mahendran in D43 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்திலும் ஜிவி பிரகாஷ் இசையிலும் தனுஷ் நடிக்க உள்ள படம் d 43.

இந்தப்படத்தில் மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி ஆகிய திரையுலக பிரபலங்கள் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது மாஸ்டர் பட பிரபலமான மகேந்திரன் d43 படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனை கொண்டாடும் விதமாக மகேந்திரன் தன் ட்விட்டர் பக்கத்தில் தன் கனவு நனவாகி விட்டதாகவும், படக்குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நெகழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.