Master Mahendran Bond With KS Ravikumar

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 16 படங்களில் தொடர்ச்சியாக நடித்துள்ளார் மாஸ்டர் பட பிரபலம்.

Master Mahendran Bond With KS Ravikumar : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் அர்ஜுன் தாஸ் நடித்திருந்தனர். விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மாஸ்டர் மகேந்திரன்.

தமிழ் சினிமாவில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த நாட்டாமை திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வந்தார். பன்முக திறமைகளை வளர்த்துக் கொண்ட இவருக்கு 2 முறை குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதும் ஒருமுறை நந்தி விருதும் கிடைத்தது. இவர் தொடர்ச்சியாக கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 16 படங்களில் தொடர்ச்சியாக நடித்துள்ளார். மகேந்திரனின் திறமையை அறிந்த ரவிக்குமார் தன்னுடைய படங்களில் எப்படியாவது வாய்ப்பு கொடுத்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.