Master Leaked Case Details

மாஸ்டர் பட காட்சிகள் லீக் ஆனதால் நொந்து போயுள்ளார் மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் குமார்.

Master Leaked Case Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கடந்த வருடமே வெளியாகியிருந்த இந்த திரைப்படம் பல்வேறு தடைகளையும் தடைகளையும தாண்டி இந்த வருட பொங்கலுக்கு வெளியானது.

படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த கையோடு இப்படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக் ஆனது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இருப்பினும் படம் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது.

ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் நஷ்டத்தை தழுவி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படக் காட்சிகளை லீக் செய்த தனியார் தொலைக்காட்சி ஊழியரிடம் ரூபாய் 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் தயாரிப்பாளர் லலித் குமார்.

இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு என்ன வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.