Master Kannada Dubbing Status

கர்நாடகாவில் மாஸ்டர் கன்னட டப்பிங் திரைப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது.

Master Kannada Dubbing Status : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி நடிப்பும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ் மட்டுமல்லாமல் இப்படம் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி என 4 மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட்டது.

ஆனால் மகாராஷ்டிர மாநிலத்தில் மாஸ்டர் படத்தின் இந்தி டப்பிங் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தமிழ் படத்திற்கு கிடைத்த வரவேற்பு கூட இந்தியில் கிடைக்கவில்லை இதனால் மாஸ்டர் இந்தி டப்பிங் தோல்வியை தழுவியது.

அதேபோல் கர்நாடகாவிலும் மாஸ்டர் படத்திற்கு கிடைத்த வரவேற்பை போல கன்னட டப்பிங திரைப்படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

இதனால் மாஸ்டர் படத்தின் கன்னட டப்பிங்கும் தோல்வியைத் தழுவியுள்ளது என அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளன.