Master Interval Scene Secrets

இந்த டயலாக்கை நீங்க சொன்னா பழசு நான் சொல்றேன் என மாஸ்டர் இன்டர்வெல் காட்சியில் விஜய் சேதுபதி பேசும் டயலாக் குறித்த சீக்ரெட் வெளியாகியுள்ளது.

Master Interval Scene Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக வெளியாகி 25 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்து வருகிறது.

இந்த கொண்டாட்டத்திற்கு நடுவே மாஸ்டர் இன்டர்வெல் காட்சியின் மாஸான டயலாக் சீக்ரெட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தளபதி விஜய் ஏற்கனவே பேசிய ஐ அம் வெயிட்டிங் என்ற டயலாக்கை இம்முறை விஜய் சேதுபதி பேசியுள்ளார்.

அதுவும் இது நீங்க பேசுனா பழசு.. நான் சொல்லுறேன் என கூறிவிட்டு ஐ அம் வெயிட்டிங் என கூறுவாராம். இன்டர்வெல் காட்சியில் இடம்பெறும் இந்த டயலாக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.