Master Hindi Remake Update

ஹிந்தியில் ரீமேக்காகிறது மாஸ்டர் திரைப்படம். JD-யாக நடிக்க போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Master Hindi Remake Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல டப் செய்து வெளியிட்டனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை இந்தியில் ரீமேக் செய்வதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம், எண்டோமால் ஷைன் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது.

இந்த படத்தில் JD-யாக நடிக்க போவது ரித்திக் ரோஷன் தான் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.