Master HD Movie Leaked in Internet

மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ஆகிய படங்களில் எச்டி பிரிண்ட் சமூக வலைதளங்களில் லீக்காகி வைரலாகி வருகிறது.

Master HD Movie Leaked in Internet : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் சாந்தனு என பலர் இணைந்து நடித்திருந்த இந்த திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியானது.

இந்த படத்துடன் சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் திரைப்படமும் மோதியது. இரண்டு படங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.

தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் மாஸ்டர் திரைப்படம் நேற்று அமேசான் பிரைம் வீடியோ வழியாகவும் வெளியானது.

இப்படியான நிலையில் தற்போது மாஸ்டர் ஈஸ்வரன் என இரண்டு படங்களில் எச்டி பிரிண்ட் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் இதன் டவுன்லோட் லிங்க் செம வைரலாகி வருகிறது.

இதனால் இரண்டு படக்குழுவும் விஜய், சிம்பு ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.