மாஸ்டர் முதல்நாள் முதல் காட்சியில் ஆர்வக்கோளாறில் விஜய் ரசிகர்கள் சிலர் செய்த வேலையால் மற்றும் ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
Master FDFS Celebration : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.
இந்த படம் பொங்கல் விருந்தாக இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. ரசிகர்கள் திரை உலக பிரபலங்கள் என பலரும் மாஸ்டர் திரைப்படத்தை கண்டுகளித்து வருகின்றனர்.
முதல் பாதி செம மாசாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர். இது ஒருபுறமிருக்க ஆர்வக்கோளாறில் சில விஜய் ரசிகர்கள் படம் ஒளிபரப்பாக தொடங்கியது அதனை புகைப்படம் எடுத்து வீடியோவாக பதிவு செய்தும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அவர்களுக்கு எச்சரிக்கை கலந்த கோரிக்கையை வைத்து வருகின்றனர்.
மாஸ்டர் படத்தின் காட்சிகள் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகி இருந்தும் திரையரங்குகளில் கூட்டம் அலை மோதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.