Master Censored With UA

மாஸ்டர் படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Master Censored With UA : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி அர்ஜுன் மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க சாந்தனு சேத்தன் ஸ்ரீமன் சஞ்சீவ் ஸ்ரீநாத் மீனா என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர்.

மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து புத்தாண்டு விருந்தாக படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தை 2021 பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ள நிலையில் படத்தை சென்சார் குழுவினருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யு ஏ சான்றிதழ் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாஸ்டர் படத்திற்கு அனிருத் இசையமைக்க எக்ஸ்பி பிலிம் கிரேட்டர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.