Master Actors Salary

மாஸ்டர் படத்தில் நடிப்பதற்காக விஜய், விஜய் சேதுபதி, அனிருத், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Master Actors Salary : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இப்படியான நிலையில் தற்போது இந்த படத்தில் நடிப்பதற்காக விஜய் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் வாங்கிய சம்பளம் குறித்து தெரிய வந்துள்ளது.

அதாவது தளபதி விஜய் ரூபாய் 80 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். விஜய் சேதுபதி ரூபாய் 10 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இசையமைப்பாளர் அனிருத் ரூபாய் 3.5 கோடி சம்பளம் பெற்றுள்ளார். அதே போல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரூபாய் 2 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளார்.