Master 100 Days Festival

மாஸ்டர் படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் குறித்து தற்போது பிரபல திரையரங்கம் பதிவிட்டு இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Master 100 Days Festival : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் முடிந்து விட்ட நிலையில் இதனை விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடி வந்தனர்.

தளபதி விஜய் ரசிகர்களின் 50வது நாள் கொண்டாட்டத்தில் இன்னொரு மகிழ்ச்சியாக சூப்பர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோகினி திரையரங்கில் மாஸ்டர் நூறாவது நாள் கொண்டாட்டம் நடப்பது உறுதி என தெரிவித்துள்ளார்.

இதனால் தற்போது இலிருந்து விஜய் ரசிகர்கள் நூறாவது நாள் கொண்டாட்டத்தை சிறப்பாக கொண்டாட பல்வேறு திட்டங்களை வகுக்க தொடங்கியுள்ளனர்.