Doctor Movie Release

நடிகர் சிம்பு மற்றும் தனுஷூடன் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் மோத உள்ளது.

March 26 Movie Release List : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கிய இவர் தனுஷின் 3 உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.

அதன் பின்னர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான மெரினா திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து காமெடி சப்ஜெக்ட் கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்து ஹீரோவாக நடித்து வந்தார்.

தற்போது மாஸான படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் டாக்டர்.

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது என்பது படத்தின் பாடல்கள் மற்றும் பிரமோஷன்களை வைத்தே நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.

இத்திரைப்படம் மார்ச் 26ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதே தினத்தில் தான் சிம்பு நடிப்பில் வெங்கட் பரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படமும் இதே தினத்தில் வெளியாக உள்ளது.

இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். படம் திரையரங்குகளில் வெளியாக அதற்கு பதிலாக நேரடியாக நெட்ப்ளிக்ஸ் தளத்தின் வழியாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

டாக்டர், ஜகமே தந்திரம் மற்றும் மாநாடு இந்த மூன்று படங்களில் எந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று நல்ல ஒரு வெற்றியை பெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள டான் என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இத்திரைப்படத்தை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி வைக்க உள்ளார். இப்படத்தின் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சூரி, சமுத்திரகனி, எஸ் ஜே சூர்யா, விஜய் டிவி புகழ், சிவாங்கி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.‌

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.