March 15 release

March 15 Release : தமிழ் சினிமாவில் மொத்தம் 7 படங்கள் நாளை திரைக்கு வர உள்ளன. அவை என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம் வாங்க.

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு திரைப்படங்களாவது ரிலீஸாவது வழக்கம். அதிலும் சில வாரங்களில் பல படங்கள் ரிலீஸாவதும் உண்டு.

தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களாகவே 5-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரமும் மொத்தம் 6 படங்கள் ரிலீசாக உள்ளன.

அவை என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம் வாங்க

1. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
2. கிரிஷ்ணம்
3. ஜூலை காற்றில்
4. நெடுநல்வாடை
5. ஆகவன்
6. இருட்டு அறையில் முரட்டு கைதி
7. கில்லி பம்பரம் கோலி

இந்த 7 படங்களில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படம் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே போல் கிரிஷ்ணம் திரைப்படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பக்தி படமாக உருவாகியுள்ளது.

இந்த 7 படங்களில் எந்தெந்த படங்கள் எந்த அளவிற்கு வரவேற்பை பெரும் என்பதையெல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.