Traffic violation
போக்குவரத்து துறை போலீஸ் அபராதம் விதித்ததில் ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை நடுரோட்டில் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Man fired his bike as traffic police fine – போக்குவரத்து விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன சட்ட விதிமுறை கடந்த 1ம் தேதி முதல் டெல்லியில் நடைமுறைக்கு வந்தது. எனவே, விதிமுறைகளை மீறுவோரிடம் போலீசார் அதிக அபராதம் விதித்து வருகின்றனர்.

இரு மகன்களையும் தூக்கிட்டு தானும் தற்கொலை செய்த பெண் – பகீர் பின்னணி

நேற்று ஒருவர் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததாக தெரிகிறது. அப்போது அவரை மடக்கிய போலீசார் அவருக்கு அபராதம் விதித்தனர். இதில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த அவர், தனது இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தியுள்ளார். அதன்பின் தீயணைப்பு துறையினர் அங்கு வந்து தீயை அணைத்தனர்.

இதுபற்றி கருத்து தெரிவித்த போலீஸ் ‘அவரின் பெயர் ராகேஷ். அவருக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை மட்டுமே செய்தனர். அவரிடம் நோட்டிஸ் கூட கொடுக்கப்படவில்லை. ஆனால், அவர் வாக்குவாதம் செய்துவிட்டு தனது வாகனத்திற்கு தீ வைத்துவிட்டார்’என விளக்கம் அளித்துள்ளனர்.