ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் மாமனிதன் படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

Mamanithan First Single Track : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. வருடத்திற்கு டஜன் கணக்கில் படங்களை கொடுத்து வரும் ஒரே ஹூரோ இவர் தான்.

இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படங்களில் ஒன்று மாமனிதன். தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. படத்திற்கு இளைய ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

வெகு விரைவில் திரைக்கு வர உள்ள இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் ட்ராக்காக தட்டிப்புட்டா தட்டிப்புட்டா என்ற பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.