Malavika Mohanan Next Movie in Tamil

Malavika Mohanan Next Movie in Tamil : மாளவிகா மோகனனுக்கு அடித்த ஜாக்பாட்டால் இளம் நடிகைகள் பொறாமையில் பொங்கி வருகின்றனர்.

தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்தவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதாவது இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பேட்ட படத்தின் வாய்ப்பை தொடர்ந்து மிகப்பெரிய ஜாக்பாட்டாக தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ப்பா என்ன ஸ்ட்ரக்சர் டா.. லுங்கியில் படுத்தபடி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன் – பார்த்து பார்த்து ஏங்கும் ரசிகர்கள் (புகைப்படம் உள்ளே)

விஜய்க்கு ஜோடியாக நடித்ததால் கோலிவுட் சினிமாவில் அதிகம் ரசிக்கப்படும் நடிகைகளில் ஒருவராக இடம் பிடித்துள்ளார். மேலும் இவர் அடுத்ததாக நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதனை மாளவிகா மோகனன் தனுஷிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி சூசகமாக தெரிவித்திருந்தார். நடிகர் தனுஷிம் கூடிய விரைவில் நாம் இணைவோம் என பதிலளித்திருந்தார்.

அது கார்த்திக் நரேனின் திரைப்படம் பற்றி தான் என தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

மாளவிகா மோகனன் அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வருவதால் இளம் நடிகைகள் கொஞ்சம் பொறாமை பொங்கி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.