Malavika Mohanan Live Chat with Fans
Malavika Mohanan Live Chat with Fans

மாஸ்டர் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி இவர்களுடைய தான் பார்ப்பேன் என வெளிப்படையாகக் கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Live Chat with Fans : தமிழ் சினிமாவின் பேட்டை படத்தில் அறிமுகமாகி தற்போது விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருப்பவர் மாளவிகா மோகனன்.

ஒளிப்பதிவாளர் மோகனன் அவர்களின் மகளான இவர் தெலுங்கு, இந்தி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

விஜய்க்கு மட்டும்தான் பொறுப்பு இருக்கா என்ன? நடிகர்களை விளாசிய புதுச்சேரி முதல்வர் – வைரலாகும் பரபரப்பு வீடியோ.!

கோலிவுட் சினிமாவில் ரஜினி படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமானாலும் அடுத்த படமே விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பெரிய வாய்ப்பு மாளவிகா மோகனனுக்கு கிடைத்தது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்கள் என விதவிதமாக பதிவேற்றி வரும் மாளவிகா தற்போது லைவ் சேட்டில் ரசிகர்களுடன் உரையாடினார்.

ரசிகர்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்துள்ளார். அப்போது மாஸ்டர் படத்தின் அதிகாலை காட்சியை சென்னையில் ரசிகர்களுடன் பார்ப்பீர்களா என ரசிகர் ஒருவர் கேட்க நிச்சயம் உங்களோடு தான் பார்ப்பேன் என கூறியுள்ளார்.

மேலும் உங்களுக்கு பிடித்தமான உடையது என கேட்டதற்கு புடவைதான் என புடவையில் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மாஸ்டர் அப்டேட் கொடுங்க என கேட்டதற்கு இந்த மனிதரிடம் கேளுங்கள் என லோகேஷ் கனகராஜை கோர்த்து விட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பிடித்தமான இசையமைப்பாளர் யார் என கேட்டதற்கு அனிருத்தின் பெயரை கூறியுள்ளார்.

தலைவன் இருக்கிறான் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இது தானா? இதோ அசத்தல் அப்டேட்!

மேலும் மாஸ்டர் படத்தில் உங்களுக்குப் பிடித்தமான பாடல் எது எனக் கேட்டதற்கு அந்த கண்ண பார்த்தாக்கா என்ற பாடலை அவர் கூறியுள்ளார்.

நான்கு நாட்களுக்கு முன்பு குரானா வைரஸை எட்டி உதைத்து விரட்டி விடுவதாக மாளவிகா மோகனன் ஒரு நகைச்சுவையான வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ இதுதான்

 

View this post on Instagram

 

Me to covid19

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on