Malavika Mohanan Photos

நடிகை மாளவிகா மோகனன் தன்னுடைய முகத்தை மறைத்து உடலை மட்டும் புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருப்பது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

Malavika Mohanan Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை படம் மூலமாக அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்திலேயே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களது நடிப்பில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது வெகு விரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் மாளவிகா மோகனன். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்து பிட்டாகி வருவதை வெளிக்காட்டும் வகையில் முகத்தை மறைத்து வெறும் உடலை மட்டும் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் சிலர் இதை ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக் கொண்டாலும் சில ரசிகர்கள் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாக மாளவிகா மோகனனை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.