Malavika Mohanan in Dhanush43

தனுஷ் நடிக்க உள்ள தனுஷ்43 படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Malavika Mohanan in Dhanush 43 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாக உள்ள படங்களில் ஒன்று தனுஷ் 43.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கயிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனுஷின் பிறந்தநாளில் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறிய மாளவிகா மோகனன் அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்திருந்தார். விரைவில் யாராவது ஒரு நல்ல கதையை உருவாக்குங்க எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது தனுஷ் நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.