Malavika Mohanan Favourite Hero
Malavika Mohanan Favourite Hero

நான் ரொமான்டிக்கானவள்.. எனக்கு இரவு தான் பிடிக்கும் என பல தகவல்களைக் கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.

Malavika Mohanan Favourite Hero : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் மாளவிகா மோகனன்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து புகைப்படம் வீடியோ என வெளியிட்டு வரும் இவர் தனக்கு பிடித்தது எது பிடிக்காதது எது ஃபேவரைட் ஹீரோ யார் என்பது பற்றியும் பேசி வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர் சீரி யலில் அவங்கள எனக்கு சுத்தமா பிடிக்காது – கோபத்துடன் சித்ரா வெளிட்ட ஷாக்கிங் தகவல் (புகைப்பட ஆதாரம் உள்ளே)

சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் மிகவும் ரொமான்டிக்கானவள்.. என்னுடைய வாழ்க்கையும் அப்படித்தான். நான் ரொமான்டிக் என்பதால் இரவு என்றால் மிகவும் பிடிக்கும்.

இரவு நேரங்களில் அவுட்டிங் நண்பர்களுடன் சாட்டிங் இவையெல்லாம் பிடித்தமான ஒன்று. நிறைய ரொமான்டிக்கான படங்களில் நடிக்க ஆசை.

குறிப்பாக விஜய் மற்றும் ரன்பீர் கபூருடன் ஆசை. தளபதி விஜயுடனான ஆசை நிறைவேறி விட்டது. அடுத்து ரன்பீர் கபூர் தான் எனக் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு நீண்ட நாள் சூட்டிங் பிடிக்காது, அதேபோல் சர்ச்சையும் பிடிக்காது என கூறியுள்ளார். ஒரு சிலர் மாதக்கணக்கில் வீட்டை விட்டு பிரிந்து இருக்கும் போது அம்மாவை நினைத்து கவலைப்படுவேன்.

ஏனென்றால் அப்பாவும் அண்ணாவும் விஷயத்தில் பிசி அம்மா மட்டும் வீட்டில் தனியாக இருப்பார், அதனால்தான் லாங் சூட்டிங் பிடிக்காது என கூறியுள்ளார்.