Makapa Anand With Son

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருக்கும் மாகப ஆனந்த் தன்னுடைய மகன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Makapa Anand With Son : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியை மாகாபா மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இவர்கள் இருக்கும் நிகழ்ச்சியில் காமெடிக்கு பஞ்சமிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாகாபா ஆனந்திற்கு திருமணமாகி மகன் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அவர் மகனின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது தன் மகனுடன் இணைந்து கேம் விளையாடுவது போன்ற புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தப்பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.