Mahima Nambiar Chat With Fans
Mahima Nambiar Chat With Fans

ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வியால் கடுப்பாகி உள்ளார் மஹிமா நம்பியார்.

Mahima Nambiar Chat With Fans : தமிழ் சினிமாவில் சாட்டை படத்தின் மூலமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் மஹிமா நம்பியார். அதன் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். இறுதியாக அசுர குரு படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இவர் ரசிகர்களுடன் சமூக வலைதளப் பக்கத்தில் உரையாடியுள்ளார். ரசிகர்கள் கேட்ட அத்தனை கேள்விக்கும் ஜாலியாக பதிலளித்துக் கொண்டிருந்தார்.

அலை பாயுதே ஹிட் சீனுக்கு அஜித்தும் காரணம் – 20 வருடத்திற்கு பிறகு மாதவன் சொன்ன சீக்ரெட்.!

அப்போது ரசிகர் ஒருவர் உங்களின் உண்மையான வயசு என்ன என்பதை வெளிப்படையாகக் கூற முடியுமா என கேட்டுள்ளார்.

இதனால் கடுப்பான மகிமா நம்பியார் ஆண்களிடம் வருமானத்தை கேட்க கூடாது பெண்களிடம் வயதையும் கேட்க கூடாது என உங்களுக்குத் தெரியாதா? நான் என்னுடைய வயதை சொல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.

இந்த விவகாரத்திற்கு பிறகும் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஜாலியாக பதிலளித்தார் மகிமா நம்பியார்.