Mahat With Wife
திருமண நாளில் தன்னுடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார் மகத்.

Mahat Revealed Secrets About Baby : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் மகத். நடிகர் சிம்புவின் மிக நெருங்கிய நண்பரான இவர் தல அஜித்துடன் மங்காத்தா தளபதி விஜயடன் ஜில்லா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சிம்புவுடன் இணைந்து வந்தா ராஜாவாகத்தான் வருவேன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய காதலியை திருமணம் செய்து கொண்டார். மகத்தின் காதல் மனைவி பிராய்ச்சி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை திருமண நாளில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மகத். மேலும் தங்களின் வாரிசு மே மாதம் இந்த பூமிக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.