YouTube video

Mahabharatham Tamil Dubbing Artist Full Reports – Viral On Social Media : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் தற்போது மகாபாரதம் என்ற சீரியல் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

பல வருடங்களுக்கு முன்பு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இந்த சீரியல் தற்போது ஊரடங்கு காரணமாக மீண்டும் ரீ டெலிகாஸ்ட் செய்யப்படுகிறது.

இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரங்கள் என பல உள்ளன. அவைகளில் கிருஷ்ணர், சகுனி மற்றும் திரௌபதிக்கு தமிழ் டப்பிங் கொடுத்தவர் யார் என்பதை ஏற்கனவே நாம் ஒரு பதிவில் பார்ப்போம்.

தற்போது துரியோதனன், கர்ணன் மற்றும் சிலருக்கு குரல் கொடுத்தது யார் என்பதை பார்க்கலாம்.

மாவீரன் கர்ணனுக்கு குரல் கொடுத்தவர் அஹந்த் ஷெரிப். இவர் பாகுபலி படத்தில் ராணாவிற்கு குரல் கொடுத்திருந்தார். உன்னைப்போல் ஒருவன் படத்தில் கணேஷ் வெங்கட்ராமனுக்கு குரல் கொடுத்தவரும் இவர் தான்.

காண்டீப தாரி அர்ஜுனனுக்கு குரல் கொடுத்தவர் செந்தில்குமார். இவர் பாலிமர் தொலைக்காட்சியில் நெஞ்சம் பேசுதே சீரியலில் மோகன் பிரசாத்திற்கும் குரல் கொடுத்து வருகிறார். இவர்தான் மகாபாரத சீரியலில் பாண்டுவிற்கும் குரல் கொடுத்துள்ளார். கொஞ்சம் உற்று கவனித்தால் தெரியும் அர்ஜுனன் மற்றும் பாண்டு ஆகியோரின் குரல்கள் ஒரே மாதிரி தான் இருக்கும்.

மகாபாரதத்தில் கிருஷ்ணருக்கு குரல் கொடுத்தவர் தசரிதி. இவர் கொஞ்சம் வயதானவராக இருந்தாலும் மென்மையான குரலை கொண்டவர். இவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட மன்னனுக்கு குரல் கொடுத்தவர் எஸ் எம் சுரேந்தர். 500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார் இவர் 600 படங்களில் டப்பிங் கொடுத்துள்ளார். நடிகர் மைக் மோகனுக்கு 75 படங்களில் குரல் கொடுத்துள்ளார்.

மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரம் துரியோதனனுக்கு பி ரவி சங்கர் என்பவர் குரல் கொடுத்துள்ளார். இவர் இயக்குநர், நடிகர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர்.அதுமட்டுமல்லாமல் மகாபாரதத்தில் சிவன் கதாபாத்திரத்திற்கும் இவர் தான் குரல் கொடுத்துள்ளார்.

துருபதனுக்கு குரல் கொடுத்தவர் டி என் பி கதிரவன். இவர் எந்திரன் படத்தில் சீனியர் சயன்டிஸ்ட் ஒருவருக்கு குரல் கொடுத்துள்ளார். மேலும் இவர் பாண்டிய நாடு படத்தில் வில்லனுக்கு குரல் கொடுத்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.