YouTube video

Mahabharatham Special – Unsolved Mystery Behind Bheem Kund: பாண்டவர்கள் ஐவரும் கௌரவர்களால் சூதாட்டத்தில் தோற்கடிக்கப்பட்டு 12 வருடம் வனவாசமும் ஒரு வருடம் அஞ்ஞாதவாசம் சென்றனர்.

அப்படி இவர்கள் காட்டில் வனவாசம் சென்ற போது பாண்டவர்கள் தாகத்தால் தவித்து உள்ளனர். வெயிலின் தாக்கம் காரணமாக திரௌபதியும் தாகத்தால் தவிர்த்துள்ளார்.

ஆனால் இவர்களுக்கு எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் கோபமான பீமன் தன் கையிலிருந்த கதாயுதத்தால் பாரையை பிளக்க தண்ணீர் கொப்பளித்து ஓடியது. அவர் தாக்கிய இடம் குளமாக மாறியது.இந்த குளம் பீம்குண்டி என்ற பெயரில் இன்று வரை இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த குளத்தில் அதிகமான மர்மங்கள் ஒளிந்துள்ளன.

இந்த குளத்தின் ஆழத்தை இதுவரை எவராலும் அளவிட முடியவில்லை. இதற்காக பலர் முயற்சித்தும் அந்த முயற்சி தோல்வியில் தான் முடிந்துள்ளது.

குளம் உருவாக்கப்பட்டது முதல் இன்று வரை ஒரு நாள் கூட இந்த குளத்தில் நீர் வற்றியது இல்லை, தண்ணீரின் அளவு குறைந்தது இல்லை என கூறப்படுகிறது.

அதேபோல் ஆசிய கண்டத்தில் சுனாமி உள்ளிட்ட பேரழிவுகள் நாட்டை தாக்கும் போதெல்லாம் இந்த குளத்தின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரிக்குமாம். இந்த குளத்தின் நீர்மட்டம் அதிகரித்தால் நாட்டில் பேரழிவு ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த குளம் மத்திய பிரதேசத்தில் சதர்பூர் மாவட்டத்தில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் புந்தேல்கண்டில் என்ற இடத்தில் உள்ள பஜ்னா என்ற கிராமத்தில் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.