YouTube video

Mahabharatham Arjunan Real Life Style : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர் மகாபாரதம்.

மிகவும் தத்ரபமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதையும் கொள்ளை கொண்டுள்ளது எனலாம்.

வனிதாவா சிங்கப் பெண்? அவர் திருந்திட்டாருனு நினைச்ச.. ஆனால்? மூன்றாவது கணவருக்கு அட்வைஸ் கொடுத்த முன்னாள் காதலர்!

மகாபாரத சீரியல் பார்க்கும் ரசிகர்களுக்கு அதில் நடிக்கும் நடிகர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த சீரியலில் கிருஷ்ணராக நடிக்கும் சௌரப் ராஜ் ஜெயின் பற்றி நாம் ஏற்கனவே ஒரு பதிவில் பார்த்தோம்.

இந்த பதிவில் அர்ஜுனனாக நடிக்கும் ஷெய்க் ஷாகிர் நவாஸ் பற்றி பார்க்கலாம் வாங்க.

இவருடைய உண்மையான பெயர் ஷெய்க் ஷாகிர் நவாஸ். இவருடைய செல்லப் பெயர் ( Nick Name ) சமீர். இவர் ஒரு வழக்கறிஞர், நடிகர் மற்றும் பாடகர்.

1984 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் பிறந்தார். தற்போது இவருக்கு 36 வயதாகிறது.

ஹரிசிங் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். நியூ லா காலேஜ் என்ற கல்லூரியில் பாரதி வித்யாபீத் யுனிவர்சிட்டி மூலமாக வழக்கறிஞருக்கான பட்டப் படிப்பைப் படித்து முடித்துள்ளார்.

80 கிலோ எடையும் ஆறடி உயரமும் கொண்டவர். ரேஹா ஷர்மா என்பவரை காதலித்து வருகிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதை பொழுதுபோக்காக கொண்டவர்.

கியா மாஸ்ட் ஹாய் லைஃப் என்ற சீரியல் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி உள்ளார். இந்த சீரியலுக்காக 7 விருதுகளை வாங்கியுள்ளார்.

இவர் கிட்டத்தட்ட பதினைந்து வருடத்தில் 22 சீரியலில் நடித்து உள்ளார். இந்தோனேசிய மொழியில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அங்கு இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவருக்கு பிடித்தமான இடம் கோவா. அடுத்ததாக இவர் அதிகம் இந்தோனேசியாவில் தான் நேரத்தை செலவிடுவார். மகாபாரதத்தில் கிருஷ்ணர் ஆக நடித்த சௌரப் ராஜ் ஜெயினின் நெருங்கிய நண்பர்.

இவர் மகாபாரத சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு ரூபாய் 2.25 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார்.

இவரது சீரியல் ஒன்று தற்போது பாலிமர் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

இவர் இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் மகாபாரதத்தில் அர்ஜுனன் சிறப்பாக நடித்திருப்பார். இந்த சீரியல் மூலமாக இவருக்கு உலகம் முழுவதும் ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது என்பது யாராலும் மறுக்கமுடியாத ஒன்று.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.