Mahaa Movie 1st Promo Video

சிம்பு மற்றும் ஹன்சிகா நடித்துள்ள மகா திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Mahaa Movie 1st Promo Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

மேலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படப்பிடிப்பு முடியும் நிலையில் சிம்புவின் பிறந்த நாளன்று மாநாடு டீசர் வெளியிட்டு படக்குழுவினர் சிம்பு பிறந்த நாளை கொண்டாடினர்.

மேலும் ஹன்சிகாவின் 50வது படமான மகா திரைப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் சிம்பு நடித்து உள்ளார்.

இந்த படம் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, சனம் ஷெட்டி ஆகியோர் நடிப்பிலும் யூ ஆர் ஜமில் இயக்கத்திலும் உருவாகியுள்ளது.

சிம்புவின் பிறந்தநாள் அன்று இந்தப் படத்தில் டப்பிங் பேசும் வீடியோவை ப்ரோமோவாக வெளியிட்டு உள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.