Magamuni Movie Review : Click Here to Read Full Movie Review | Arya | MagaMuni Review | Magamuni Tamil Review | Indhuja | Mahima Nambiyar
சாந்த குமார் இயக்கத்தில் ஆர்யா இரட்டை வேடங்களில் நடிக்க மஹிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் நாயகிகளாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் மஹா முனி.

Magamuni Movie Review : 

படத்தின் கதைக்களம் :

அரசியல் வாதி ஒருவரின் அடியாளாக இருந்து வரும் மகா வம்பு தும்பு எல்லாம் இனி வேண்டாம் என முடிவெடுத்து தன்னுடைய மனைவி ஹிந்துஜா மற்றும் அவர்களின் மகனுடன் மகிழ்ச்சியாக முடிவு செய்கிறார், ஆனால் விதி அவரை ஒரு கொலை கேசில் சிக்க வைத்து விடுகிறது.

தண்டவாளத்தில் மூதாட்டி.. அருகில் ரயில்… என்ன ஆச்சு நீங்களே பாருங்க (வீடியோ)

இது ஒரு புறம் இருக்க ஈரோட்டை சேர்ந்த முனி தாழ்த்தட்ட குடும்பத்தை சேர்ந்தவர். அவருக்கு ஒருவருடன் நட்பு ஏற்படுகிறது. அதே போல முனி மீது மஹிமா நம்பியார்க்கு காதல் ஏற்படுகிறது. இதனால் இவரை கொலை செய்ய சதி வேலை நடக்கிறது.

இந்த பிரச்சனைகளில் இருந்து மகாவும் முனியும் எப்படி தப்பிக்கிறார்கள்? இவர்களுக்கு இடையே என்ன தொடர்பு என்பது தான் இப்படத்தின் சீரியஸான கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

நான் கடவுள் படத்தை போல முழுக்க முழுக்க ஆர்யாவின் நடிப்பிற்கு தீனி போடும் படமாக மகா முனி அமைந்துள்ளது. இரண்டு வேடங்களிலும் அருமையான நடிப்பை கொடுத்து அசத்தியுள்ளார் ஆர்யா.

மஹிமா நம்பியாரும், ஹிந்துஜாவும் அழகான நாயகிகளாக படத்தில் கலக்கியுள்ளனர்.

தொழில் நுட்பம் :

இசை :

தமனின் இசை படத்திற்கு பெரிய பலம். பின்னணி இசை பிரமாதம்.

ஒளிப்பதிவு :

அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவு தெளிவு.. கிராமத்து கதையை அழகாக படம் பிடித்துள்ளது.

எடிட்டிங் :

வி. ஜே சபு ஜோசப்பின் எடிட்டிங் கச்சிதம். படத்திற்கு தேவையானதை அழகான கோர்வையாக கொடுத்துள்ளார்.

இயக்கம் :

சாந்தகுமார் மௌனகுரு படத்தின் வெற்றிக்கு பிறகு 8 வருடம் இடைவெளி விட்டிருந்தாலும் தரமான கதைக்களத்துடன் நம்மை மகிழ்வித்துள்ளார். சிந்துக்க வைத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதைக்களம்
2. படத்தின் இசை
3. ஒளிப்பதிவு
4. ஆர்யாவின் நடிப்பு

தம்ப்ஸ் டவுன் :

1. படத்தின் நீளம் மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

REVIEW OVERVIEW
மகா முனி விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
magamuni-movie-review-2மொத்தத்தில் மகாமுனி வாழ்க்கையை வாழ முயல்வர்களுக்கு ஒரு அழகிய பாடம்.