Madhavan Family Affected by COVID19

மாதவனை தொடர்ந்து அவருடைய குடும்பத்தார் 5 பேருக்கும் கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Madhavan Family Affected by COVID19 : சீனாவில் உருவான கொரானா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் கொடுத்து வருகிறது. 2019 இறுதியில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் 2020 முழுவதையும் ஆட்டி படைத்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 90 ஆயிரம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர்.

மேலும் தொடர்ந்து அடுத்தடுத்து பல பாலிவுட் பிரபலங்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, இங்கிலீஷ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் மாதவன் கொரானாவால் பாதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருடைய குடும்பத்தார் 5 பேருக்கு கொரானா வைரஸ் உறுதிசெய்யப்பட்டு இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருடைய குடும்பத்தார் அனைவரும் விரைவில் பூரண குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.