Mari Selvaraj Dance in Neeya Naana

நீயா நானா செட்டில் செம குத்தாட்டம் போட்டு அதிர வைத்துள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

Maari Selvaraj Dance in Neeya Naana : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராம். இவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மாரி செல்வராஜ்.

ராமிடம் பணியாற்றியதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதிர், கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.

முதல் திரைப்படமான இது மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது தனுஷை வைத்து கர்ணன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

கர்ணன் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்க லால் பவுல், நடராஜன் சுப்பிரமணியன், கௌரி கிஷன், லட்சுமி பிரியா, சந்திரமௌலி என பலர் நடித்துள்ளார்கள்.

மேலும் இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க கலைப்புலி எஸ் தாணு அவர்கள் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏப்ரல் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பல வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா என்ற நிகழ்ச்சியில் இளைஞர்கள் ஆட விரும்பும் நடனம் என்ற பெயரில் நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

இதில் மாரி செல்வராஜ் செம டனனகுத்தாட்டம் போட்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இந்த அரிய வீடியோ இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

இது மாரி செல்வராஜ் துணை இயக்குநராக இருக்கும் போது கலந்து கொண்ட நிகழ்ச்சியின் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கலந்து கொண்ட நிகழ்ச்சி தான் இது என்பது குறிப்பிடத்தக்கது .

இதோ அந்த வீடியோ

தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள கர்ணன் படத்தினை தொடர்ந்து இவர் விக்ரம் மகன் துருவ் விக்ரமை ஹூரோவாக வைத்து படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.