Maanadu Update

Maanadu Update – மாநாடு படத்தில் சிம்புவுடன் பிரபல நடிகர் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற திரைப்படத்தை அடுத்து மாநாடு படத்தில் நடிக்க உள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் காமெடி கலந்த அரசியல் ஆக்ஷ்ன் படமாக உருவாக உள்ளது.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்க போலீஸ் வேடத்தில் அர்ஜுன் நடிக்க உள்ளார்.

இவர்களை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் ஜெய்யும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

ஜெய் ஏற்கனவே சிம்புவுடன் இணைந்து வாலு, இது நம்ம ஆளு ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Simbu and Jai
Simbu and Jai