மாநாடு சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Maanaadu Set Photos : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் அதற்காக பிரமாண்ட செட்டுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது தீயாக பரவி வருகிறது.