Maanaadu Second Look Poster

மாநாடு படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக சிம்பு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Maanaadu Second Look Poster : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்துக்காக ஒட்டுமொத்த சிம்பு ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தில் சிம்பு முஸ்லிமாக அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று 10:44 மணிக்கு வெளியானது. நெற்றியில் குண்டு பாய்ந்து முகம் முழுவதும் ரத்தம் சொட்டச்சொட்ட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து தற்போது சத்தமில்லாமல் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் நடிகர் சிம்பு.

கையில் துப்பாக்கியுடன் செம ஸ்மார்ட்டான லுக்கில் சிம்பு இடம்பெற்றிருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விட செகண்ட் லுக் போஸ்டர் கெத்தாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.