Maanaadu First Single Track Release Update

மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Maanaadu First Single Track Release Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் தற்போது மாநாடு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா, மற்றும் பலர் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். சிம்புக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

தற்போது இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் ட்ராக் வீடியோ வரும் மே 14-ஆம் தேதி ரம்ஜான் விருந்தாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.