Maanaadu First Look From Nov21

மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது ரிலீசாகும் என புதிய போஸ்டர் ஒன்றுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெங்கட் பிரபு வெளியிட்டார்.

Maanaadu First Look From Nov21 : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு மற்றும் ஈஸ்வரன் என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

ஈஸ்வரன் படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் வெகு விரைவில் வெளியாகும் என அறிவித்ததைத் தொடர்ந்து நேற்று இன்று காலை 9.09 மணிக்கு இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று வெளியாகியுள்ள அறிவிப்பில் வரும் நவம்பர் 21ஆம் தேதி 10:44 மணிக்கு மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பிற்காக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரே செம்ம மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நிச்சயம் வேற லெவலில் இருக்கும் எனவும் சிம்பு ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.