Maanaadu Dubbing Start With Pooja

மாநாடு திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு சென்று உள்ளது. அதன் வேலைகள் பூஜையுடன் தொடங்கியதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Maanaadu Dubbing Start With Pooja : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

படத்தில் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க பாரதிராஜா, மனோஜ், யோகி பாபு எஸ் ஜே சூர்யா என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது படக்குழு அடுத்த கட்ட பணிகளுக்கு முன்னேறியுள்ளது. அதாவது மாநாடு படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கி விட்டதாக புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

இவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.