Maanaadu Climax Shooting Update

மாநாடு லேட்டஸ்ட் வீடியோவை வெளியிட்டு படம் குறித்த அப்டேட்டை கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

Maanaadu Climax Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க எஸ் ஜே சூர்யா, ஆர்கே சுரேஷ், பாரதிராஜா, மனோஜ், எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் அதற்காக செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அப்டேட் கொடுத்துள்ளார்.

இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.