m.k.Stalin Speech : The AIADMK is a government that can not solve their problem. Political News, Tamil nadu, Politics, BJP, DMK, ADMK

M.K.Stalin Speech :

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நடந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுகவிடம் இருந்த 12 தொகுதியை நாம் கைப்பற்றியுள்ளோம். விரைவில், திமுக ஆட்சி பொறுப்பில் அமரும் என கூறியுள்ளார்.

கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதியின் 96வது பிறந்த நாள் விழா மற்றும் லோக்சபா தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் பொள்ளாச்சியில் நேற்று நடந்தது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், ‘கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என பேசிவந்தார்கள். ஆனால், இன்று அந்த வார்த்தை திமுகவால் முறியடிக்கப்பட்டுள்ளது.

கொங்கு மண்டல மக்கள், திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளார்கள். திமுக கூட்டணி மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து இந்த வெற்றியை தேடித்தந்து உள்ளார்கள். இந்த வெற்றியை சரித்திரம் பேசும்’ என கூறினார்.

அடுத்ததாக, சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒன்றரை வருடத்தில் வருமா அல்லது, 6 அல்லது 3 மாதமா? அல்லது உடனடியாக வரக்கூடுமா? என்ற கேள்விக்குறியோடு காத்திருக்கிறோம். நாம் வெற்றிபெற்ற 13 தொகுதியில் ஒன்று திருவாரூர். இது, ஏற்கனவே கலைஞர் வென்றது.

கலைஞர் ஆட்சியில் தான் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டன: ஸ்டாலின் பெருமிதம்!

இது போக, அதிமுகவிடம் இருந்த 12 தொகுதியை நாம் கைப்பற்றியுள்ளோம். இன்று வேண்டுமானால் தமிழகத்தில் நாம் ஆட்சி பொறுப்புக்கு வராமல் இருக்கலாம்..ஆனால் விரைவில், திமுக ஆட்சி பொறுப்பில் அமரும் என்று தெரிவித்தார்.

அதை தொடர்ந்து பேசிய ஸ்டாலின், 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், திமுக 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ஆளும்கட்சியாக உள்ள அதிமுக 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. வெற்றியில் 13 பெரிதா, 9 பெரிதா(?) எனக்கூட சிலருக்கு தெரியவில்லை என கூறினார்.

மேலும் தமிழக மக்களை பற்றி சிந்திக்க இந்த ஆட்சியாளர்களுக்கு நேரம் இல்லை என்று குற்றம் சாடினார்.

தமிழக மக்களுக்கு குடிக்கக்கூட தண்ணீர் இல்லை., விவசாயிகள் பல கொடுமைக்கு ஆளாகி இருக்கிறார்கள்.. அவர்களது பிரச்னையை தீர்த்து வைக்க முடியாத அரசாக அதிமுக அரசு உள்ளது.

கனிமொழியிடம் தோற்று போவதற்காகவே தமிழிசை போட்டி.!

தற்போது அதிமுகவுக்குள் பல அணிகள் உருவாகி, குழப்பம் ஏற்பட்டு உள்ளது. அவர்களால், தமிழக மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்க முடியாது. எனவே தமிழக மக்களை காக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு திமுகவுக்கு உள்ளது.. விரைவில் அதை நிறைவேற்றும்..! இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.