தர்பார் படத்தால் நஷ்டம் ஏற்பட்டதாக விநியோகஸ்தர்கள் தயாரிப்பு நிறுவனத்தை அணுக இந்தியன் 2 பட விபத்தை காரணம் காட்டி கை விரித்துள்ளனர்.
Lyca Reply to Darbar Loss : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தர்பார். நயன்தாரா யோகி பாபு நிவேதா தாமஸ் என பலர் இணைந்து நடித்திருந்த இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் நல்ல வசூல் கிடைத்தது. ஆனால் செங்கல்பட்டு உள்ளிட்ட சில இடங்களில் உள்ள விநியோகஸ்தர்களுக்கு மட்டும் நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.
இவர்கள் ரஜினி மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை அனுப்பியும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. தயாரிப்பு நிறுவனம் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தால் நிறைய இழப்பு ஏற்பட்டு விட்டதாக கூறி கைவிட்டுள்ளது.
ரஜினியை சந்திக்க முயன்றும் அது முடியாமல் போயுள்ளது. இதனால் இப்பகுதி வினியோகஸ்தர்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தர்பார் பட விநியோகிஸ்தர்களையும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.