Lyca Reply about Indian 2 Dropped Issue
Lyca Reply about Indian 2 Dropped Issue

கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்தை லைகா நிறுவனம் கைவிட இருப்பதாக வெளியான தகவலுக்கு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Lyca Reply about Indian 2 Dropped Issue : தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்2.

படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்தே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் தொழிலாளர்கள் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமலால் ஏற்பட்ட தொடர் நஷ்டம் இந்தியன் 2-வை கைவிட்ட‌ லைகா?? – வெளியான அதிர்ச்சித் தகவல்

மேலும் தொடர்ந்து பல சர்ச்சைகளை படம் சந்தித்து வருவதால் இந்த படத்தை கைவிட்டு விடலாம் என லைக்கா நிறுவனம் முடிவெடுத்து இருப்பதாகவும் அதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்ற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் தற்போது இதுகுறித்து லைக்கா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியன் 2 படத்தை கைவிட இருப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல என அந்நிறுவனம் கூறியுள்ளது.